Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ? அதற்கான விளக்கம்தான் இது.


நமது மாதச்சம்பளத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்படும் 10% தொகையினை income tax section 80C யில் (LIC, Tuition fee, mutual fund, PLI, salary யில் பிடிக்கப்படும் CPS,...உள்ளிட்டவைகளை ) ரூ.1,50,000 வரை கழித்துக்கொள்ளலாம்.

ஆனால் கூடுதலாக செலுத்தப்படும் ரூ.50,000/- த்தை உங்கள் கையிருப்பில் உள்ள தொகையினை புதிதாக NPS (National pension scheme or system தேசிய ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் செலுத்தி income tax ல் வரிவிலக்கு பெறலாம்.
ஆக, *section 80CCD(1B)ல் மாதச்சம்பளத்தில் பிடித்தம் செய்யும் CPS தொகையினை Income tax வரிவிலக்கில் கழிக்க முடியாது.