பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை: சுகாதாரத் துறை இயக்குநர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.வி.ராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பனித்திட்டு மற்றும் முருங்கப்பாக்கம் பகுதியில் 10 நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு எச்-1, என்-1, வைரஸ் தாக்கல் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பன்றிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எச்-1, என்-1 வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கும் முன்னெச்சிர்கை நடவடிக்களை மேற்கொள்வது தொடர்பான சிறப்பு கூட்டம் நடைபெற்றது,
அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

முதற்கட்டமாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள். சமுதாய நலவழிக்கூடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள். சுகாதார ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் அதனால்; மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள். மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,
அனைத்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சந்தேகத்துக்குரிய நோயாளிகளை (பன்றிக் காய்ச்சல்) புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நுண்ணுரியல் நிபுணர் அந்நோயாளியின் தொண்டையில் உள்ள தொற்று மாதிரிகளை சேகரித்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்,
இந்நோய் மிதமாக பாதித்தவர்கள் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசுமார்பக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே பிரத்தியேகமாக உள்ள பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இந் நோய் தீவிரமாக தாக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்பட்டவர்கள். புதுவை ஜpப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும்,
இந்நோயிற்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும், இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயின் பாதிப்பை தடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும்,
துணை இயக்குனர் (பொதுசுகாதாரம்) இந்நோயை கண்கானிக்கும் தலைமை அதிகாரியாக செயல்படுவார், இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் அரசுமார்பக மருத்துவமனைகளில் இந்நோய்க் கான கட்டுப்பாட்டுஅறைகள் செயல்படும்,
இந்நோய்க்கான மாத்திரை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள். சமுதாய நலவழிக்கூடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இந்நோய் தொடர்பாக சந்தேகப்படும் நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் மருந்து) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படும்,
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு நோய் தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிவிளக்கப்படும்,
அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு பன்றிகளின் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது என்றார் ராமன்.