அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்

கோவை: தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாதம் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அராசணை வெளியிடப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி நேரு விளையாட்டு அருகே புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் இடத்தை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்திகளாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு விளையாட்டுத் துறை மேம்படுத்த தனி கவனம் எடுத்து வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் ரூ.3.85 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நகரின் மையப் பகுதியில் 5.63 ஏக்கர் பரப்பளவிலான மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் அரங்கில் நீச்சல் குளம், கைப்பந்து, டென்னீஸ், தடகளம மற்றும் பல்வேறு உள்அரங்குகள் விடுதி வசதியுடன் அமைக்கப்படவுள்ளது தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.