மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.