புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு? வங்கி அதிகாரி பேச்சால் பரபரப்பு

மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.2,000 புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது என்று வங்கி அதிகாரி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.2ஆயிரம் புதிய நோட்டு செல்லாது
என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது. என்று அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் கூறியுள்ளார். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக கூறி, புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டது மத்திய அரசு. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000, ரூ.500 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.New 2000 rupees notes will be demonetisation? says bank staff

இருப்பினும் ஏராளமான ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாமலே உள்ளது. நகர் புறங்களில் உள்ள முக்கிய இடங்களில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு வருகிறது. சில ஏடிஎம்கள் இன்னும் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. போதிய அளவு பணம் சப்ளை செய்யாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருச்சியில் நடந்த விழாவில் பேசிய அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ, மார்ச் 31-ந்தேதிக்குள் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் பேசுகையில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பணம் மதிப்பு குறைப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 25 சதவீதம் சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தவறான கொள்கையை புரியாமல் மத்திய அரசு செயல்படுத்தி சிக்கி தவிக்கிறது. பண மதிப்பு குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம், 31-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.2ஆயிரம் புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/new-2000-rupees-notes-will-be-demonetisation-says-bank-staf-272639.html