தென் மாவட்டங்களில் இருநாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: 'காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.




வலுவில்லை :

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றால், தமிழகத்திற்கு ஓரளவு மழை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேகம் குறைந்த காற்றால், காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறவில்லை.


இருநாட்களுக்கு...

இந்நிலையில், 'தென் மாவட்டங்களில், ஒருசில பகுதிகளில், இன்றும், நாளையும்(டிச.,29 மற்றும் 30) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வட மாவட்டங்களில் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது' என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.