"செல்லிடப்பேசி சலுகைக் கட்டணங்கள் இன்றும், நாளையும் கிடையாது': பிஎஸ்என்எல்

செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 31, ஜன.1) சலுகைக் கட்டணங்கள் இல்லாமல் அந்தந்த திட்டங்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்டத்தின் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ப.முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (டிச. 31 மற்றும் ஜன.1) பிளாக் அவுட் நாள்களாக அறிவித்துள்ளது.
அதன்படி இந்த இரு நாள்களிலும் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கு சலுகைக் கட்டணங்கள் இல்லாமல் அந்தந்த திட்டங்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான பூஸ்டர், ரேட்கட்டர், சிறப்புக் கட்டண வவுச்சர்கள் இந்த இரு நாள்களிலும் வேலை செய்யாதபோதும், டேட்டா பூஸ்டர், நெட்பேக், டேட்டா சிறப்புக் கட்டண வவுச்சர்கள் வேலை செய்யும்.
ஆகவே, அவற்றின் மூலம் செயலிகளின் வழியே அதிகப்படியான கட்டணமின்றி வாழ்த்துகள் மற்றும் செய்திகளை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.