'ஸ்வைப் மிஷின்' மூலம்,
காஸ் சிலிண்டர்
பில் செலுத்தும்
முறை, புத்தாண்டு
முதல் அமலுக்கு
வர இருக்கிறது.
'ரூபாய் நோட்டுகள்
செல்லாது' என்ற
அறிவிப்பை தொடர்ந்து,
நாடு முழுவதும்
பணத் தட்டுப்பாடு
நிலவி வருகிறது.
பணமில்லா வர்த்தகத்தை
ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக
ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல்
போன்றவற்றுக்கு, 'ஸ்வைப் மிஷின்' மூலம் பணம்
பெற்றுக் கொள்ளும்
முறையை, அனைத்து
எண்ணெய் நிறுவனங்களும்
அமல்படுத்தி உள்ளன. இனி, வீடு மற்றும்
வர்த்தக காஸ்
சிலிண்டர்கள் வாங்கும் போது, அதற்கான பணத்தை,
'ஸ்வைப் மிஷின்'கள் மூலம்,
வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முறை, புத்தாண்டு
முதல் படிப்படியாக
நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தாங்கள் கணக்கு வைத்துள்ள
வங்கிகளிடம், 'ஸ்வைப் மிஷின்' கேட்டு காஸ்
ஏஜென்சிகள் விண்ணப்பித்துள்ளன. இனி, காஸ் சிலிண்டர்
வினியோகிக்கும் ஒவ்வொரு ஊழியரின் கையிலும், 'ஸ்வைப்
மிஷின்' இருக்கும்.
காஸ் சிலிண்டர்
வினியோகிக்கும் போதே, இந்த மிஷின் மூலம்
அதற்குரிய பில்
தொகையை பெற்றுக்
கொள்வர்.