மின்னணு பரிவர்த்தனைக்கு பரிசுத் திட்டம்: இன்று முதல் அமலாகிறது

புதுடில்லி: ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக நிதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


15 ஆயிரம் அதிஷ்டசாலிகள்


மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் 15 ஆயிரம் அதிஷ்டசாலிகளை தினமும் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.