கால்நடைத்
துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் விழுப்புரத்தில்
திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பட்டதாரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 36 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இதில் 45 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதற்கான நேர்காணல் 9 மண்டல அலுவலகங்களில் திங்கள்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 2,274 பேரும், கடலூர் மாவட்டத்தில் 1,505 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான நேர்காணல் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் இணை இயக்குநர் மோகன், விழுப்புரம் துணை இயக்குநர் குருவய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாளில் 1,054 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். துணை இயக்குநர்கள் தலைமையிலான 10 குழுவினர் நேர்காணல் பணியை மேற்கொண்டனர். கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. உடல்திறனுக்காக சைக்கிள் ஓட்ட தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து, பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதுகுறித்து இணை இயக்குநர் மாதேஸ்வரன் கூறியது:
விழுப்புரம் மண்டலத்தில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 3,779 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வருகிற 30ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேர்காணல் நடைபெறும். நேர்காணலில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை பட்டியலிட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். அவர்கள், தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்வார்கள் என்றார் அவர்.
பட்டதாரிகள் ஆர்வம்: அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கலை அறிவியல் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் நேர்காணலில் பங்கேற்றனர்.