அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு அரசாணை: ஆளுநர், முதல்வர் வெளியிட்டனர்

புதுச்சேரி மாநில அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

புதுவை சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்றது. சமூக நலத்துறை செயலர் மிஹிர் வரதன் வரவேற்றார். இயக்குநர் மீனாகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.
முதல்வர் விநாராயணசாமி தலைமை தாங்கிப் பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின் எந்தெதந்த திட்டங்கள், நிதி ஒதுக்கீடு 30000 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 20000 பேர் பயன்கள் பெறுகின்றனர். ரூ.56.7 கோடி செலவு செய்யப்படுகிறது.

ஊனத்தின்படி நிதி, ஈமச்சடங்கு நிதி, கல்வி உதவித் தொகை, ரயில்வே பயணப்படி, திருமண உதவித் தொகை, பெட்ரோல் மானியம், இலவச அரிசி, விழிப்புணர்வு முகாம், சுற்றுலா செல்லவும் நிதியுதவி தரப்படுகிறது.
அமைச்சரவையில் முடிவு செய்து 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டது.
மத்திய அமைச்சராக இருந்த போது 3 சதவீத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் நிறைவேறறினோம். நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற அமைச்சர் கந்தசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி தீர்வு காணும்.
அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். பல திட்டங்கள் உள்ளன. மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர்கள். கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும். மாற்றுத்திறனாளிகள் நலச்ட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்ற மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சிறப்புரை ஆற்றியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீடடுக்கான அரசாணை வெளியிட்டது சிறப்பானதாகும். இந்த ஆணை பிறப்பிக்க 10 ஆண்டுகள் ஆனது வருத்தம் தருகிறது.
சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, இயக்குநர் மீனாகுமாரி ஆகியோர் இதற்கு கடுமையாக பணிபுரிந்தனர். மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகளுக்காக 3 மாதங்களுக்கு ஒருமுறை குழு கூடி தீர்வு காணும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்வரை பாராட்டுகிறேன்.
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு என்பது வெறும் வேலைவாய்ப்பு மட்டும் இல்லை. பிறருக்கும் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்ட வேண்டும.
செயல்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு வேலை என்பது நன்றாக பணிபுரிய வேண்டும். பணிக்கு ஏற்ப நீங்கள் தயாராக வேண்டும். மக்களுக்கு சிறப்பாக சேவை புரிய வேண்டும்.
நீங்கள் எவ்வாறு அரசு ஊழியர்களிம் எதிர்பார்க்கிறீர்களோ அதே போல் நீங்களும் அரசுப் பணியில் செயலாற்ற வேண்டும்.
மாணவ, மாணவியர் நலனுக்காக கல்வியறிவு, மட்டுமின்றி தொழிறகல்வியையும் பயில வேண்டும். அரசு பணியையே மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் சுயவேலைவாய்ப்பு செய்வதற்கான தகுதியை வளர்க்க வேண்டும்.
திறன் மேம்பாடு, பிறருக்கு வேலை தருதல், போன்ற தகுதிகளை மேம்படுத்த வேண்டும். தன்னிறைவு பெற்ற தொழில்முனைவோராக முயல வேண்டும். தொழிற்கல்வி, திறன் மேம்பாட்டுக்காக புதுவை அரசு சிறப்பான திட்டங்களை வைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வங்கிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. தொடங்கிடு இந்தியா (ஸ்டார்ட் அப்) திட்டத்தின் கீழ் சிறு தொழிற்சாலைகளை தொடங்க மாற்றுத்திறனாளிகள் முன்வர வேண்டும்.
3 சதவீதம் ஒதுக்கீடு இருந்தாலும் அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம் வங்கிகள் வழங்கும் உதவிகளை பயன்படுத்தி முழுமையாக முன்னேறலாம். தன்னிறைவு பெற மாற்றுத்திறனாளிகள் முயற்சிக்க வேண்டும்.
பதவியேற்ற 6 மாதங்களில் மாற்றத்திறனாளிகள் 3 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை அமுல்படுத்திய அரசுக்கு பாராட்டுக்கள் என்றார் கிரண்பேடி.
சட்டப்பேரவை தலைவர் வி.வைத்திலிங்கம், அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக 175 பேருக்கு ரூ.11.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.