'பிளஸ்
2வுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும்; 10ம் வகுப்புக்கு, மார்ச் 8 முதல்,
30 வரையும், பொதுத் தேர்வுகள் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா தேவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு, மார்ச்
மாதத்திலும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையும்
நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளுக்கும், மார்ச்சிலேயே
பொதுத்தேர்வு முடிகிறது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு
முடிந்து, முடிவுகள் வெளிவரும் வரை, 50 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

