பிளஸ் 1 மாணவர்களுக்கு 'எமிஸ்' பதிவேற்றம் பணிகள் : இணை இயக்குனர் உத்தரவு

'அனைத்து மாவட்டங்களிலும் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தும் பணிகள் ஜன.,க்குள் முடிக்க வேண்டும்' என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் 'தேர்வு எண்' (நாமினல் ரோல்) 'எமிஸ்' பதிவு மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து பிளஸ் 1லும் விடுபட்ட மாணவர்களுக்கு 'எமிஸ்' எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் பணிகள் ஜன., முதல் துவங்குகிறது. இதையடுத்து 7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கும் 'எமிஸ்' பதிவை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து அமுதவல்லி கூறுகையில், "மாணவர்கள் உண்மையான எண்ணிக்கையை அறியும் வகையில் 'எமிஸ்' பதிவுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பொதுத்தேர்வுக்காக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, ஜன.,க்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கும் 'எமிஸ்' எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்