நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது???

*இன்றைய மருத்துவபலன்*     *(22-11-16) செவ்வாய்கிழமை
                                   ✍🏾இயற்கை மருத்துவ ஆலோசகர் சிவசித்தன் அருண்:9094830243*                                                                                        *~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*                 *
*ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.


*வெள்ளை அணுக்கள்*
*நம் ரத்தத்தில் சிவப்பு* *அணுக்கள்,* *வெள்ளை* *அணுக்கள், ரத்தத் தட்டுகள்* *ஆகியவை இருக்கின்றன.*               *இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்பு சக்தியைத் தருபவை. அதனால் வெள்ளை அணுக்களுக்குப் போர் வீரர்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு.*

*இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள்  செய்கின்றன.*

*இரண்டு வகை சக்தி*👇🏾👇🏾

*நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் போது இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறுகிறது. அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உடல் நம்மை  நிர்ப்பந்திக்கிறது.*

*இதுபோல் தோல் பகுதி வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று  அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது புதிதாக ஒரு நோய் ஏற்படும் போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.*

*ஆனால் பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்து கொள்ளும். இந்தக்  காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற் போல் உடல் எச்சரிக்கையாகி விடும்.*

*இதற்கு நினைவு  செல்கள் என்று பெயர். இதனால்தான் ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டால் அதன் பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை நோய் மீண்டும் வருவதில்லை.*

*எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன..?*👇🏾👇🏾👇🏾

*ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து பிறக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால் இந்தச் சக்தி  நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரி விகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக் குறைபாடு பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய் உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும்.*

*உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை  செய்யும் போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும் இது  என்னுடைய சிறுநீரகம் இல்லை, இது என்னுடைய இதயம் இல்லை, என்பது அந்த உடலுக்குத் தெரிந்து விடும்.*

*அதன் பிறகு அந்த உறுப்பு மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும்.*
*இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தக் காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும்  தேவையில்லை.*

*சைவ உணவு நல்லது என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம்,  கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவு முறையைப் பின்பற்றினாலே போதும்.*                                                                            *இன்று உடல் உழைப்பு  குறைந்த வேலைகளையே பலரும் விரும்புகிறோம்.*              
*அதனால் எளிமையான உடற்பயிற்சி அரைமணி நேரம் நடைப்பயிற்சி விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 hrs மணி முதல் 8hrs மணி நேரம் வரை தூக்கம் முக்கியம்.*

*தீர்வு:*

*துளசி இலைகள் ஒரு நோய் எதிர்ப்புத் திறன் போன்று செயல் படிகின்றன. பராமரித்தல் மற்றும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் ஒரு கலவை. அது பாக்டீரியா மற்றும் வைரஸ் காரணமாக தீங்கு விளைவிக்கும் நோய்க்கு எதிராக போராடுவது மட்டுமன்றி மேலும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியைக் கூட்டுகிறது. இது நச்சு இலவச உடற்கூறுக்கு எதிராக ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது மற்றும் அதிகமான விஷத்தன்மை காரணமாக ஏற்படும் செல்லுலர் சேதத்தைத் தடுக்கிறது.*

*இதை உபயோகிப்பது எப்படி?*👇🏾👇🏾👇🏾

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலையில் வெறும் வயிற்றில் நான்கு புதிய துளசி இலைகளை மென்று விழுங்குங்கள்.                        சாப்பிடும் முன்  தண்ணீரீல்  இலைகளைக் கழுவ வேண்டும். அவைகளை மென்ற பிறகு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். குறைந்தது அடுத்த 30 நிமிடங்களுக்காவது வேறு எதையாவது சாப்பிடுவதைத் தவிருங்கள்.  நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக கிடைக்கும்...*                                *உடல் உபாதைகள் சம்மந்தமாக சந்தேகம் கேட்டறிய அனுக வேண்டிய அலைபேசி எண்:9094830243... உங்கள் ஆரோக்கிய நலனில் அக்கரையுடன் இயற்கை மருத்துவ ஆலோசகர் சிவசித்தன் அருண்...