கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், இந்த ஆண்டும், ஜெர்மன் மொழி கற்றுத்தர உத்தரவிடப் பட்டு உள்ளது.
கே.வி., பள்ளிகளில், மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது. ஆங்கிலம் முதல் மொழி; ஹிந்தி இரண்டாம் மொழி. பிராந்திய மொழி அல்லது வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்று, மூன்றாம் மொழியாக கற்றுத் தரப்படுகிறது.



இதன்படி, ஜெர்மன் நாட்டுடன், மத்திய அரசு செய்த ஒப்பந்தப்படி, 2012 - 13 முதல், தேர்வு செய்யப்பட்ட சில, கே.வி., பள்ளிகளில், ஜெர்மன் கற்றுத் தரப்பட்டது. அதை, மூன்று ஆண்டுகளில், 50 ஆயிரத்து, 978 மாணவர்கள் கற்றுள்ளனர்.


ஜெர்மன் நாட்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதால், இந்தாண்டில், ஜெர்மன் மொழி கற்றுக் கொடுப்பதில் குழப்பம் நீடித்து வந்தது.ஆனால், ஜெர்மன் மொழி கற்க, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இந்த ஆண்டும், ஜெர்மன் மொழி கற்றுத் தரலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.