மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதிக்கும் நோக்கியா!

புது தில்லி: உலகப்புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இரண்டு வருடங்களுக்கு முன்பு
முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 'இரண்டு வருடங்களுக்கு போட்டியில்லை' என்ற நோக்கியாவின் ஒப்பந்தம் 2016-உடன் முடிவடைவதைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் அலைபேசி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெச் .எம்.டி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் நோக்கியா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2017-ஆம் ஆண்டில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் 'உலகலாவிய மொபைல் கூட்டமைப்பு' மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் நோக்கியா நிறுவன தலையை செயல் அதிகாரி ராஜிவ் சூரி உரையாற்ற உள்ளார். எனவே அந்த மாநாட்டில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மூன்று புதிய ஆண்டிராய்டு வகை ஸ்மார்ட் போன்களை நோக்கியா அறிமும் செய்யவுள்ளதாகவும்.அவற்றில் ஒரு போனுக்கு நோக்கியா D1C என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.