வருமான வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

துதில்லி: தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் - 1961 மற்றும் நிதிச்ச சட்டம் - 2016 ஆகிய இரண்டு சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரும் 'வரிச் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த மசோதாவை அறிமுகம் செய்த பொழுது, ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இருந்த போதிலும் குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.