வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால் DEPOSIT செய்யலாம்.. டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்

டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை பயன்படுத்த மத்திய
அரசு அனுமதி அளி்த்துள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
குடிநீர்க் கட்டணம், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம்
500, 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்
நள்ளிரவுக்கு மேல் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது
நள்ளிரவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது நிறுத்தப்படும்
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்
500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யத் தடை இல்லை
மத்திய, மாநில, அரசு பள்ளி, கல்லூரிகளில் ரூ2000 வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்
பழைய 500 ரூபாய் மூலம் ப்ரீபெய்டு மொபைல்களில் ரூ500 வரை ரீசார்ச் செய்யலாம்
வங்கிகளில் பாஸ்போர்ட்டை காண்பித்து வெளிநாட்டினர் பணம் பெறலாம்
வெளிநாட்டினர் தங்கள் நாட்டு பணத்தை வாரத்திற்கு ரூ5000 வரை மாற்றிக் கொள்ளலாம்
பழைய நோட்டுகளை பயன்படுத்தி டிச.3 முதல் டிச 15 சுங்க கட்டணம் செலுத்தலாம்

கூட்டுறவு அங்காடிகளில் ஒரு முறை மட்டும் ரூ5000 வரை பொருட்களை வாங்கலாம்