தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.ரூ.50, ரூ.100 நோட்டுகள்கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடிஅறிவித்தார். மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளும் ஒழிக்கப்பட போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது.வதந்தியை மறுக்கும் வகையில், 'நோட்டு வாபஸ் கட்டுக்கதை அழிப்பு' என்ற தலைப்பில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

'ரூ.50, ரூ.100 புழக்கத்தில் இருக்கும்



அதில், 'ரூ.50, ரூ.100 உள்பட எந்த நோட்டுகளையும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த நோட்டுகள் அனைத்தும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்' என்று கூறப்பட்டு உள்ளது.இதைப்போல புதிதாக வெளியிடப்பட்டு உள்ள ரூபாய் நோட்டுகளில் 'சிப்' பொருத்தப்பட்டு உள்ளது என்று வெளியான தகவல்களை மத்திய அரசு மறுத்து உள்ளது
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks