பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது: மத்திய அரசு

புதுதில்லி


பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இது மட்டுமன்றி பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனை யகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவை களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் நவம்பர் 14-ம் தேதி வரை ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று மீண்டும் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.