சென்னை மக்களுக்கு ஒர் அதிர்ச்சி: இன்னும் 25 நாட்களுக்கு பிறகு குடிக்க தண்ணீர் இருக்காது

சென்னை
சென்னை மாநகர் பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு பெய்த அளவுக்கு அதிகாமான மழையால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது.


ஆனால் இந்த ஆண்டு சென்னையில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போய் பனிபெய்யத் தொடங்கிவிட்டது. சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 7 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது.

சென்னையில் ஒரு நாளைக்கு 830 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீர் இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆந்திர அரசு தமிழகத்துக்கு கிருஷ்ணாநதியிலிருந்து 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.