டெல்லி:
பொதுத்துறை பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் டெபிட் மற்றும் கிரடிட்
கார்டுகளை பயன்படுத்தி ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ரூ 2,000 பெற்றுக்
கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு
வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நாடு
முழுவதும் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் குவிந்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், புதிய நோட்டுகளை பெறுவதற்கும் பல்வேறு
கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து வருகிறது. இதனால் பொதுமக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரூபாய்
நோட்டு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு பெட்ரோல்
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் ஆகிய 3 எண்ணெய்
நிறுவனங்கள் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து புதிய அறிவிப்பு ஒன்றினை
வெளியிட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட சில பொதுத் துறை பெட்ரோல்
பங்குகளில் டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு மூலம் ரூ2,000 பெற்றுக்
கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் சில தினங்களுக்கு
நீடிக்கும் என்றும் ஆனால் எப்பொழுது முடியும் என்று குறிப்பிடப்படவில்லை.
இதன்
மூலம் ஒரு நபர் ஒரு நாளுக்கு 2000 ரூபாய் வரை ரொக்கமாக பெற்று கொள்ளலாம்.
பெட்ரோல் பங்குகளில் ஏற்கனவே பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்
நோட்டுகள் நவம்பர் 24-ம் தேதி வரை வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,
அதற்கு பின்னர் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.