தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை?

தீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத பூஜை பண்டிகை முதலே, தீபாவளி பண்டிகைக்கான முன் தயாரிப்புகள் துவங்கி உள்ளன. தீபாவளி பண்டிகை, சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வரையும், அதேபோல், அக்., 31, திங்கள் கிழமையும் வழக்கம் போல், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 


ஆனால், பல தனியார் பள்ளிகள், வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. எனவே, ஆசிரியர், மாணவர், பெற்றோர் வேண்டுகோள்படி, பல மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை எடுத்து கொள்ள, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சில பள்ளிகள், வெள்ளிக்கிழமை மதியம் வரை, பள்ளிகளை இயக்க முடிவு செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், அதற்கு பதில், வரும் வாரங்களில் விடுமுறை நாளான சனிக்கிழமையில், ஈட்டு வகுப்பு நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.