ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி

ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரி முதல்வர் ரவீந்திரநாத் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார்.
இந்த பொறுப்பில் இருந்த, பேராசிரியர் மணிவண்ணன், 2015ல், ஓய்வு பெற்றார். அதனால், அவரது பொறுப்புகளை, பதிவாளர் கலைச்செல்வன் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரியான, பாப்பிரெட்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வராக இருந்த ரவீந்திர நாத் தாகூர், நேரடி நியமனத்தின்படி, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.