2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் பெண்களுக்கான அபாய பட்டன் அறிமுகம்

புதுதில்லி: பெண்களின் வேதனையை போக்கும் நோக்கில், 2017 ஜனவரி 1 முதல் அனைத்து செல்போன்களில் 'அபாய பட்டன்’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தெரிவித்தது. பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க செல்போன்களில் 'அபாய பட்டனை’ அறிமுகம் செய்ய உள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.அகமது, அசுதோஸ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு தலைநகர காவல் துறை அளித்த உறுதிச் சான்றில்,  2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் 'அபாய பட்டன்’  அறிமுகம் செய்ய உள்ளோம். தற்போது உள்ள 100, 101, 102 போன்ற அவசர அழைப்பு எண்களை எடுத்து விட்டு ஒரே அவசர உதவி எண்ணாக 112 அறிமுகம் செய்ய உள்ளோம். 1 ஆண்டுக்குள் தற்போது உள்ள அனைத்து அவசர அழைப்பு எண்களும் இரண்டாம் நிலை எண்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.