வினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வு?

  மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல், 'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. 
 
          சில பள்ளிகளில் மட்டும் பெயரளவில் பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. பருவத்தேர்வு வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்கின்றன; சில இடங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தயாரிக்கின்றன.

கோவை மாவட்டத்தில், சிறுவர் கலா மன்றத்தின் சார்பில், முதலாம் பருவ தேர்வுக்கான ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வினாத்தாள் தேர்வு நடக்கும் முன், விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.