வேலைவாய்ப்புப் பிரிவில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்புப் பிரிவில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரேவற்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் வேலைவாய்ப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் நீங்கலாக)- முன்னுரிமையற்றோர், பொதுப்பிரிவு-முன்னுரிமையற்றோர் ஆகியோர் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு எட்டம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது முதல், அதிகபட்சம் 1.4.2016 அன்றைய நாளில் பொதுப்பிரிவு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவினர் 32 வயது மிகாலும், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாலும் இருக்க வேண்டும்.
எனவே தகுதியானோர் சென்னை கிண்டி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் வேலைவாய்ப்புப் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று வரும் 15-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைத்து பயனடையுமாறு ஆட்சியர் (பொறுப்பு) அழகுமீனா தெரிவித்துள்ளார்.