ரூ.249-க்கு
300
ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒரு ஜிபி இணைய சேவையை ரூ.1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும். இணைய பயன்பாடு 300 ஜிபியை தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் ரூ.1-க் கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெறுகிற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி இணைய சேவை என்பது பிஎஸ்என்எல் இதுவரை அறிவித்த இணைய சேவைகளிலேயே மிகக் குறைவான கட்டணத்தைக் கொண்ட தாகும். புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் ரூ.249-க்கு சேவையை பெறலாம். அதற்கு பிறகு இந்த சேவைக்கு ரூ.499 செலுத்த வேண்டும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைய சேவையில் நிறைய வாடிக்கை யாளர்களை சேர்க்கும் முயற்சியாக நாடு முழுவதும் இத்திட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் செயல்படுத்தப் படவுள்ளது.