டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 17

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி
தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. பறக்கும் பலூனில் பயன்படுத்தப்படும் வாயு - ஹைட்ரஜன்
2. சலவை செய்ய உதவும் வாயு - குளோரின்
3. திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர் - அயோடின்
4. உணவு கெடாமல் பாதுகாப்பதற்கு உபயோகிக்கும் பொருள் - சோடியம் பென்கேட்
5. இரத்தச் சிவப்பணுக்கள் குறைவால் - இரத்தசோகை உண்டாகிறது.
6. குளோரோபாம் என்பது - மயக்க மருந்து
7. குளோரோ மைசிட்டின் எதனைக் குணப்படுத்துவதற்கு பயன்படுகிறது - டைபாய்டு
8. வானவில் எதனால் உருவாகிறது - பரவுதல் மூலம்
9. வைட்டமின் - பி குறைவால் உருவாகும் நோய் - பெரி பெரி
10. காமா கதிர்களின் பயன் - புற்று நோய் நிவாரணி
11. குழந்தை வளர்ச்சிக்கு முக்கியமானது - பால்
12. செயற்கையாக பழங்களை பழுக்க செய்ய பயன்படும் வாயு - எத்திலின்
13. மண்ணை காரமாக மாற்ற சேர்க்கப்படுவது - கார்பனேட்
14. காரிலுள்ள ரேடியேட்டரின் பயன் - இயந்திரத்தை குளிர்விக்க
15. தொழு நோயை குணமாக்குவது - சல்போன்ஸ்
16. கண்ணாடி என்பது - அதிகமாக குளிரூட்டப்பட்ட பாலிமர்
17. DNA என்பது - புரதச் சேர்க்கை
18. மாலிதியான் என்பது - புகைச்சுருட்டு கொல்லிட
19. ரேடியோ செயல்திறனை அளக்கும் கருவி - கியூரி
20. ஒரு அணுத்துகள்களை துரிதப்படுத்தும் கருவி - சைக்ளோட்ரான்
21. விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் - யூரி ககாரின்
22. தேநீரை எளிதில் குளிரச் செய்வது - பீங்கான் கோப்பை
23. வெள்ளை நிலக்கரி என்பது - யுரேனியம்
24. டார்பன்டைன் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது - பைன்மரம்
25. மஞ்சல்காமலை குணமடைய உபயோகப்படும் மூலிகை - கீழாநெல்லி
26. மனித உடலில் செரிக்கும் அமிலம் - ஹைட்ரோ குளோரிக் அமிலம்
27. முன் கழுத்துக் கழலை எதன் குறைவால் ஏற்படுகிறது - அயோடின்
28. பெனிசிலினை கண்டுபிடித்தவர் - அலெக்சாண்டர் பிளமிங்
29. சோடியம் எப்பொழுதும் எதனுள் வைக்கப்படுகிறது - மண்மெண்ணெய்
30. வளிமண்டலத்தில் உருவாகாத வாயு - குளோரின்
31. மலேரியா தடுப்பு மருந்துடன் உபயோகப்படும் கலவை - குளோரோடுயின்
32. தங்கத்துடன் சேர்க்கக்கூடிய உலோகம் - செம்பு
33. உலர் பனிக்கட்டி வீட்டு சீதோஷ்ண நிலையில் தருவது - கார்பன் டை ஆக்சைடு வாயு
34. ஸ்பிரிங் செய்ய பயன்படும் உலோகம் - கெட்டிப்படுத்திய எஃகு
35. கொழுப்பில் கரையும் வைட்டமின் - A, D, E, K
36. ஈஸ்ட் என்பது - காளான்
37. அமீபிக் வயிற்றுப் போக்கிற்கு காரணம் - புரோடோசோவா
38. நியூட்ரானைக் கண்டறிந்தவர் - சாட்விக்
39. திரவப் பொருளின் அழுத்தமானது எல்லா திசைகளிலும் சமமான அளவில் செல்கிறது எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி.
40. தனிமங்களின் அட்டவணையை தயாரித்தவர் - மெண்டலீப்
41. பித்தளை எதன் உலோகக் கலலை - தாமிர துத்தநாகம்
42. மீன்கள் எதன் வழியாக சுவாசிக்கிறது - செவுள்
43. இரும்பு துருபிடிக்கும் போது - இரும்பின் எடை கூடும்.
44. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கிறது - 271/3 நாட்கள்
45. நுரையீரலைத் தாக்கும் நோய் - காசநோய்
46. உடலின் எந்தப்பகுதியை டிப்தீரியா தாக்குகிறது - தொண்டை
47. துணைக்கோள் இல்லாத கோள் - புதன்
48. நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் ஒருவகை உயிர்க் கொல்லி நோய் - எய்ட்ஸ்
49. கலீனா என்பது எதன் தாதுப்பொருள் - ஈயம்
50. குழாய் மின் விளக்கில் பயன்படுத்தும் மூலகம் - பாதரசம்