10ம் வகுப்பு தனித்தேர்வு நாளை முதல் விண்ணப்ப பதிவு

சென்னை: 'பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, நாளை முதல், செப்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது
. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்., மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு துணைத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில், நேரடியாக விண்ணப்பிக்கலாம். செப்., 2 முதல், 9 வரை, விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு அனுமதி திட்டமான, 'தட்கல்' திட்டத்தில், செப்., 16 மற்றும் 17ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத விரும்புவோருக்கு செய்முறை பயிற்சியும், தேர்வும் அவசியம். மேலும் விபரங்களை, இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.