உள்ளாட்சித்
தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை
அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம்
தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட
வாக்காளர் பட்டியல், உள்ளாட்சித்
தேர்தலுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வார்டுகள், தெருக்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தப் பட்டியல் தயார்
செய்யப்பட்டு, அதனை கடந்த 19-ஆம்
தேதிக்குள் வெளியிட அனைத்து மாவட்டத்
தேர்தல் அலுவலர்களும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி,
பிரதான வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும்
வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப்
பட்டியல்: பிரதான வாக்காளர் பட்டியலுடன்,
திருத்தப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலை
வரும் 26-ஆம் தேதிக்குள் தயார்
செய்ய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் மாற்றங்கள், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரையில்
சேர்த்து வெளியிடப்படும்.
வாக்குச்சாவடி
சீட்டுகள் ("பூத் சிலிப்'): உள்ளாட்சித்
தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி,
வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை வரும் 27-இல்
தொடங்கி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்கவும்
மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
என மாநிலத் தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது