'நீட்' தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ 'சீட்'

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' என்ற, தேசிய நுழைவுத் தேர்வின் முடிவுகள், கடந்த, 16ம் தேதி வெளியிடப்பட்டன. எட்டு லட்சம் பேர் எழுதிய தேர்வில், 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும், எந்த அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில்,
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர முடியும்; தேர்ச்சி பெறாதவர்கள் சேர முடியாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'நீட் தேர்வு தேர்ச்சி என்பது, படிப்பில் சேர்வதற்கான தகுதி மட்டுமே.
அதுவே, கல்லுாரியில் சேர்வதற்கான, 'மெரிட்' பட்டியல் இல்லை. நீட் தேர்ச்சி இருந்தாலும், தனியார் கல்லுாரிகளின் விதிகளை ஏற்றால் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.