ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை : விண்ணப்பங்கள் பெற அழைப்பு

டேராடூன் இந்திய ராணுவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் சேர்வதற்கு எழுத்து, நேர்முக தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். எழுத்து தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு ஏப்.10ல் நடக்கும் நேர்முக தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும். 

தேர்விற்கான விண்ணப்பபடிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை 'கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரி, டேராடூன், உத்ரகாண்ட்' என்ற முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் பெற்றுகொள்ளலாம். இதற்கு 'கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரி, டேராடூன் பெயரில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பொது பிரிவினர் ரூ.550, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ரூ.505க்கான டி.டி., பெற்று அனுப்ப வேண்டும். கல்லுாரியில் சேர்பவர்கள் 13 வயதுடையவராகவும், 7ம் வகுப்பு படிப்பரோ, தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 'தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம், பிரேசர் பால சாலை, வி.ஓ.சி.,நகர், சென்னை -3,' என்ற முகவரிக்கு செப்.30க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை www.tnpsc.gov.in, www.rimc.gov.in., என்ற இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். இதில் தேர்வு பெறுபவர்களுக்கு டிச.1 மற்றும் 2 ல் நடக்கும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படும்.