பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு.பாண்டியராஜன் அவர்கள் நியமனம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் 'மாபா' பாண்டியராஜனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அதன் பிறகு அமைச்சரவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த இலாகா ராஜேந்திர பாலாஜியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.


பெஞ்சமினிடம் இருந்த பள்ளிக்கல்வித்துறை பறிக்கப்பட்டு, கே.பாண்டியராஜனிடமும், பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு நாளை நடக்க உள்ள விழாவில் கவர்னர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.