'ஜாம்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு

'ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.டெக்.,கில் சேருவதற்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வுக்கு, வரும், 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய உயர் கல்வி தொழில்நுட்பக் கல்லுாரிகளான ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் இந்திய உயர் அறிவியல் கல்வி தொழில்நுட்பக் கல்லுாரிகளான, ஐ.ஐ.எஸ்.சி.,யிலும், எம்.எஸ்சி., மற்றும்
எம்.டெக்., சேர, ஜாம் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில், இந்த படிப்பில் சேர விரும்புவோர், செப்., 5ம் தேதி முதல், அக்., 6 வரை, விண்ணப்பிக்கலாம் என, டில்லி ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு, பிப்., 12ல் நடத்தப்பட உள்ளது.