தமிழக அரசு பள்ளிகளில் பயிலும்
ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களையும்
அவர்களின் ஆதார் எண்ணுடன் எமீஸ்
கணிணி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை
விரைவுபடுத்தியிருக்கிறது.
தமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் 14 வகை
நலத்திட்டங்கள் செயல்படுவதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன. அதை
தடுக்கும் வகையில் எமீஸ் எனப்படும்
கல்வி மேலாண்மை தகவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில்
ஆண்டுதோறும் பயிலும் முதல் வகுப்பு
தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் பெயர் முகவரி, பெற்றோர்
பெயர், அவரின் பள்ளி, முன்பு
படித்த பள்ளி ஆகிய விபரங்கள்
பற்றி ஆதார் எண்ணுடன் அவர்களின்
ரத்த பிரிவை சேர்த்து இணைக்க
வேண்டும்.
இந்நிலையில் முதல் வகுப்பு படிக்கும்
மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து அதை
மாநில கணினி தொகுப்பில் இணைக்க
வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி
இயக்கமான எஸ்.எஸ். ஏ.
அதிகாரிகள் உத்தரவிடுள்ளனர். இந்த
பணிகளை ஆசிரியர்கள் வரும் ஆகஸ்ட் 7க்குள்
முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.