துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற பதவிகள் உள்பட 79 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு இறுதி முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தனர்

துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற பதவிகள் உள்பட 79 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு இறுதி முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தனர்

துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற பதவிகள் உள்பட 79 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 10 இடங்களில் தேர்வு பெற்றுள்ளனர். தமிழக அரசில் 3 துணை கலெக்டர்கள், 33 டி.எஸ்.பி.கள், 33 உதவி வணிக வரித்துறை ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் ஆகியோர் அடங்கிய 79 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.
இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 4 ஆயிரத்து 282 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 3 ஆயிரத்து 407 பேர் மெயின் தேர்வை எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட்டது. முதல் 10 இடங்கள் அந்த தேர்வில் 164 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத்தேர்வு கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற சி.வித்யா, இ.சதீஷ்குமார், சி.ஜெயப்பிரீதா, சுரேஷ், பிரபாகரன், மந்தாகினி, கல்பனா தத், திவ்ய தர்ஷினி, மகேஷ்வரி, பிரீத்தி பார்கவி ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்றனர். இறுதி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண்களின் அடிப்படையில் வருகிற 19-ந் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பிறகு அவர்களுக்கு பதவி ஒதுக்கீடு குறித்து தெரியவரும். முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் மேயர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.