சம்பள உயர்வு கோரி மத்திய அரசு ஊழியர்கள் செப். 2-ந் தேதி வேலை நிறுத்தம்: மகா சம்மேளனம் தகவல்

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறியதாவது,
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் வைர விழாவையொட்டி அகில இந்திய மாநாடு வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சென்னை புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடக்கிறது. இதில் 105-க்கும் மேற்பட்ட மத்திய அரசு துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

விலைவாசி உயர்வு, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், வங்கிகள் தனியார் மயம் உள்ளிட்டவற்றை கண்டித்தும், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்க கோரியும் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில்நாடு முழுவதும் 2.15 கோடி பேர் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் மகாசம் மேளனம் சார்பில் 33 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்