ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 உயர் பதவிகளுக்கு, ஆக., 7ம் தேதி நடக்க உள்ள, 'சிவில் சர்வீசஸ்' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

இந்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., போன்ற, 24 வகை உயர் பதவிகளில், 1,049 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு, ஆக., 7ல் நாடு முழுவதும் நடக்கிறது. நேற்று தகுதி பெற்ற
விண்ணப்பதாரர்களுக்கான,'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான தேர்வு நடத்தும், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை தகுதி தேர்வில், சரியான விடையை தேர்வு செய்யாதவர்களுக்கு, 'மைனஸ்' மதிப்பெண் படி, ஒரு கேள்விக்கு, மூன்றில், ஒரு பங்கான, 0.33 மதிப்பெண் கழிக்கப்படும். அதேபோல், 'அப்ஜெக்டிவ்' வினாக்களில், இரண்டு விடைகளை தேர்வு செய்திருந்தாலும், அது தவறாக எடுக்கப்பட்டு, 'மைனஸ்' மதிப்பெண் படி கழிக்கப்படும்.
தேர்வர்கள், மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 'கறுப்பு நிற, 'பால்பாயின்ட்' பேனா கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்' என, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.