சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அனுமதி?

புதுடில்லி, :சமூக வலைதளங்களான, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவற்றை, அரசு உயரதிகாரிகள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு, விரைவில் சட்டத் திருத்தம் நிறைவேற்ற உள்ளது; ஆனால், அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட, தடை விதிக்கப்பட உள்ளது. 


அகில இந்திய சேவை விதிமுறைகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு விதி முறைகளை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தயாரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு, இந்த விதி முறைகள் பொருந்தும். 

அரசுக்கு எதிராக

வரைவு விதி முறை அறிக்கை யில்கூறப்பட்டுள்ளதாவது:அரசு உயரதிகாரிகள், சமூக வலைதளங்கள் மற்றும், 'டிவி' சேனல்களில், அரசுக்கு எதிராக கருத்துகளை கூற, அதிகாரி
களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுவான விஷயங்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள, அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர். 
அதிகாரிகள், தங்கள் பெயரை குறிப்பிடாமலோ, புனைப்பெயரிலோ, ரேடியோ, 'டிவி' மற்றும் பத்திரிகைகளில், அரசை விமர்சிக்கும் வகையில், எவ்வித ஆவணங்களையும்வெளிப்படுத்தக்
கூடாது. 

ஒழுங்கு நடவடிக்கை

பொது அமைப்புகள் ஏற்பாடு செய்யும், ஆடம்பரமற்ற நிகழ்ச்சிகளில், சிவில் அதிகாரி கள் பங்கேற்கலாம். அதிகாரிகளின் இரு மாத சம்பளத்துக்கு அதிகமான விலையில் உள்ளபொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை வைத்திருந் தால், அதுகுறித்து, அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
விதி முறைகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசுகளின் அனைத்து தலைமைச் செயலர்களும், வரைவு விதி முறைகள் தொடர்பான தம் கருத்துகளை, ஆக., 12க்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.