'பேஸ்புக்'கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் : பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை

'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.
உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலமும்; மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் மூலமும், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சிகளின் போது, ஆசிரியர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டு மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள பக்கங்களை பார்த்து, நேரத்தை வீணடிப்பதாக புகார்கள் வந்துள்ளன. 
இதையடுத்து, பயிற்சி நேரத்தின் போது, ஆசிரியர்கள் மொபைல் போனைபயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வட்டார வள மைய பயிற்சிக்கு வரும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், பயிற்சி நேரத்தில் மொபைல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களிடம், நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks