ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை பதிவேடுட்டை சரிசெய்யும் காலக்கெடு நீட்டிப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
          தமிழகம் முழுவதும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் உள்ள தகவல் தொகுப்பை, தற்போதைய நிலைக்கு சரி செய்து, அதனுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, ஜன., 18ம் தேதி துவக்கப்பட்டது.
இப்பணியில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மொபைல் எண் போன்ற விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது. இப்பணியை பிப்., 5ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. பணி நிறைவு பெறாததால், ஜூலை, 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இன்னும் பணி நிறைவு பெறாததால், ஆக., 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது