பி.ஆர்க்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு

பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப தேதி, ஜூலை, 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41 இன்ஜி., கல்லுாரிகளின் பி.ஆர்க்., படிப்பில், 2,400 இடங்களுக்கு, தேசிய, 'ஆர்கிடெக்' நுழைவு தேர்வு எனப்படும், 'நாட்டா' தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.


இதில், 1,700 இடங்கள், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான, 'ஆன் - லைன்' விண்ணப்பபதிவு, ஜூன், 25ம் தேதி துவங்கி, கடந்த, 4ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம், வரும், 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.