மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கு கட்- ஆப் மதிப்பெண்கள் வெளியீடு

நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட் - ஆப் மதிப்பெண்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் சி.ஆ. சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில், இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 22-ஆம் தேதியும், மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 23-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வுக்கு, கீழ்க்கண்ட கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இளநிலை மீன்வள அறிவியல் : பொதுப் பிரிவினர் - 192. பிற்படுத்தப்பட்டோர் - 187. பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் - 175. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 185.75. பட்டியல் இனத்தவர் - 180. பட்டியல் இனத்தவர் அருந்ததியினர் - 172. பழங்குடியினர் - 161.25. மாற்றுத் திறனாளிகள் - 111.5. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் - 185. தொழில் கல்வி (மீன்வளம்) - 130. தொழில் கல்வி (மேலாண்மை) - 160.5. விளையாட்டு வீரர்கள் - 175.
இளநிலை மீன்வளப் பொறியியல் : பொதுப் பிரிவினர் - 191.5. பிற்படுத்தப்பட்டோர் - 188.25. பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் - 177. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 187. பட்டியல் இனத்தவர் - 184. பட்டியல் இனத்தவர் அருந்ததியர் - 168. மாற்றுத் திறனாளிகள் - 120.75.
கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 564 மாணவ, மாணவிகளும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 169 மாணவ, மாணவிகளும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks