செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வந்தால், அவர்களை நிராகரிக்காமல், செப்., 30 வரை சிறப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.