நாளை (24.7.2016) இரண்டாம் கட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு சென்னையில் 14,500 பேர் எழுதுகிறார்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் நாளை நடக்கிறது. சென்னையில் 14,500 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

 
      நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பி பிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வை (AIPMT) மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்தது.2016-2017-ம் கல்வி ஆண் டுக்கான நுழைவுத்தேர்வு கடந்தமே மாதம் 1-ம் தேதி நடத்தப்படும் என்று சிபிஎஸ்சி அறிவித்திருந்தது. தேர்வு எழுது வதற்காக தமிழகத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் உட்பட நாடுமுழு வதும் 6.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “அகில இந்திய ஒதுக் கீடு இடங்கள், தனியார் மருத்து வக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மே 1-ம் தேதி நடக்கும் அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜூலை 24-ம் தேதி இரண்டாவது கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத் தப்படும். முதல் கட்ட தேர்வில் விண்ணப்பிக்காத மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண் ணப்பித்து தேர்வு எழுதலாம்” என்று தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மே மாதம் நடந்த தேசிய தகுதித் தேர்வை நாடுமுழுவதும் 6 லட்சத்துக்கு மேற்பட்ட மாண வர்கள் எழுதினர். இந்நிலையில் ஜூலை 24-ம் தேதி (நாளை) நடக் கவுள்ள இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்குதமிழகத்தில் இருந்து 14,500 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னை யில் 21 மையங்களில் தேர்வு நடை பெறுகிறது.

ஆகஸ்ட் 17 தேர்வு முடிவு இதுபற்றி சிபிஎஸ்இ அதிகாரி களிடம் கேட்டபோது, “இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு பிறகு வரும் மாண வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களி லிருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள் ளது” என்றார்.