உளவுத்துறையில் 209 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்பில் 209 செக்யூரிட்டி அசிஸ்டன்ட் (மோட்டார் டிரான்ஸ்போர்ட்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், எல்.எம்.வி. ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மற்றும் மோட்டார் மெக்கானிசம் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, சிறப்புத்தகுதிகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திறமைத் தேர்வில் வாகனங்கள் இயக்குதல் மற்றும் மெக்கானிக் திறமைகள் சோதிக்கப்படும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 சம்பளமாக வழங்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்  www.mha.nic.in   என்ற இணையதளம் மூலம் 06.08.2016-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த 2 நாட்களுக்குள் கட்டணம் செலுத்திவிட வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mha.nic.in/sites/upload_files/mha/files/IBSecAssitantExamAdv2016_150716.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.