இந்திய ரிசர்வ் வங்கியில் 163 கிரேடு 'பி' பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2016-ஆம் ஆண்டிற்கான 163 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officers in Grade 'B'(General)

காலியிடங்கள்: 163
தகுதி: 01.07.2016 தேதியின்படி 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 62,400
தேர்வு செய்யப்படும் முறை: இரு நிலையிலான் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http:// www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2016
 Phase-I  ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 4, 2016
Phase-II ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 19, 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT150720166CD716F0DBB94F0E897E1FA9CEBBC4BB.PDF என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.