கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்கும் புதிய 'ஆப்' அறிமுகம்.

மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது.

 
           இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது: வழக்கமாக, மாதத்தில், 30 - 60 நிமிடங்கள் தான், பணம் எடுக்க, பொருட்கள் வாங்க, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். மீதி நேரங்களில் கார்டுகளை, 'சுவிட்ச் - ஆப்' செய்ய, புதிய 'ஆப்' உதவும். கார்டு தொலைந்தாலும், பண மோசடி செய்ய முடியாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு, ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ்வேர்டு' மூலமாகவே, 'சுவிட்ச் - ஆன்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.