குஜராத் பொறியியல் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் காலியாகும்

ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில், மொத்தம் உள்ள, 71 ஆயிரம் இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்களில், 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள குஜராத்தில், 138 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 71 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இந்த கல்லுாரிகளில் சேருவதற்கு கடைசி நாளான நேற்று வரை, மொத்தம், 48 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

தாங்கள் விரும்பிய பாடம், கல்லுாரி கிடைக்காமல், வழக்கமாக, 15 சதவீத மாணவர்கள், பொறியியல் கல்லுாரிகளில் சேருவதில்லை. அதனடிப்படையில், மொத்தம், 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, 22 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்ததாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.